Rock Fort Times
Online News

ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 சடலங்கள்; முரசு புயலில் சிக்கி காணாமல் போன சென்னை, காசிமேடு மீனவர்களா?

சென்னை, காசிமேடு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் செண்பகராஜன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 பேர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், முரசு புயலின் போது இவர்கள் காணாமல்போய் இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின.
இதனைத் தொடர்ந்து, காசிமேடு மீன்பிடி துறைமுகக் காவல் நிலையத்திலும், மீன்வளத்துறை அலுவலகத்திலும் 9 மீனவர்களின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அவர்களைத் தேட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அப்புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதற்கிடையில், ஆந்திராவின் கோத்தப்பட்டினம் பள்ளிப்பாலம் கடற்கரையில் 8 பேரின் சடலங்கள் கரைஒதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் சென்னை, காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களா? என்று தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து, சடலங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தமிழக மீன்வளத்துறை உதவி இயக்குநர் தலைமையிலான குழு ஆந்திராவுக்கு விரைந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்