தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய சராயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக இருந்த பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.