Rock Fort Times
Online News

ஆடி வெள்ளி: அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம் .அதிலும் ஆடி வெள்ளி என்றால் தனி சிறப்பு .ஆடி வெள்ளியை முன்னிட்டு திருச்சியில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ,காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பீம நகர் செடல் மாரியம்மன் கோவில், திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்பட திருச்சி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் பெண்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விளக்கேற்றி வழிபட்டனர். அம்மனை தரிசனம் செய்வதற்காக திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் பக்தர்களுக்கு குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும் திருவானைக்காவல் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதலாக போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்