Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்…

முதலமைச்சா் கலந்து கொள்கிறாா்..

தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக டெல்டா மண்டலத்திற்கான கூட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. திருச்சிக்கு வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் பயணமாக முதல்வர் வரவுள்ளார். இவர் பாசறைக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புறையாற்றுகிறார். இக்கூட்டத்தில், அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை மத்திய, தஞ்சை தெற்கு, திருச்சி தெற்கு, மத்திய, வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவடட்ங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் இந்த மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையொட்டி திருச்சி ராம்ஜிநகர், பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் விழா மேடை மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விழாவிற்கான ஏற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்லூரியில் விவசாயிகளுக்கான வேளாண் சங்கமம் 2023 என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான கண்காட்சி நடைபெற உள்ள இடத்தையும் அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்