Rock Fort Times
Online News

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்: தவெக அரசின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் செங்கோட்டையன் பதில்..!

எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காசிபாளையம் பேரூராட்சியில் சந்தை வளாகம் மற்றும் புதிய சமுதாயக் கூடத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என்றாலும், அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், பேரூராட்சிகளின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் வரை உள்ளதாகவும், அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என்றும், தீபாவளியன்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் தனிப்பட்ட விரோதம் மற்றும் மனக்கசப்புகளால் நிகழ்ந்தவை என்றும் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பான கேள்விக்கு, சம்பந்தப்பட்டவர் முதலமைச்சரிடம் உரிய விளக்கம் அளித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்