Rock Fort Times
Online News

“சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தை திமுக உருவாக்குகிறது..!”- அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற தோற்றத்தை உருவாக்க திமுக முயற்சி செய்து வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

குற்றப் பின்னணி கொண்ட 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 6,700 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2,800 வழக்குகள் மே 10-ம் தேதிக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டும் பதிவு செய்யப்படாமல் இருந்தவை என்றும் கூறினார். தற்போது காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் விஜய் நேரடியாகச் சட்டம் ஒழுங்கு நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். தனிப்பட்ட பிரச்சினைகள், குடிபோதை மற்றும் தகாத உறவு உள்ளிட்ட காரணங்களால்தான் பெரும்பாலான கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் விளக்கமளித்தார். மேலும், அடுத்த 6 மாதங்களில் 10 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தீபாவளி நாளில் 8 கொலைகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நிலுவை வழக்குகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்த கருத்து தவறானது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்