தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி நஜ்முல் ஹோடாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை சென்னையில் ஆபரேஷன்ஸ் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றி வந்த நஜ்முல் ஹோடாவுக்கு தற்போது தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த ஆபரேஷன்ஸ் பிரிவு ஏடிஜிபி பொறுப்பு, ஆயுதப்படைப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் ஆர். தினகரனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.