Rock Fort Times
Online News

திருச்சியில் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவராயநேரிக்கு தனியார் பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. ஆனால் போதிய வருவாய் இல்லாத காரணத்தாலும், பள்ளிகள் விடுமுறை என்பதாலும் நாள் ஒன்றுக்கு 2 நடைகள் மட்டுமே சமீப காலமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற நேரங்களில் துவாக்குடியுடன் அந்த பஸ் திரும்பி சென்று விடுவதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, வியாழக்கிழமை, தேவராயநேரிக்கு வந்த அந்த தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று டிரைவர், கண்டக்டர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். போதிய வருவாய் இல்லாததால் தான் அனைத்து நடைகளும் இயக்க முடியவில்லை, எனவே, பள்ளிகள் தொடங்கும் வரையில் தற்போது இயக்குவதுடன் கூடுதலாக ஒரு நடை இயக்குகிறோம் என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்