திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்குள்ள இறைச்சி, மீன் கடைகள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வந்த தெர்மக்கோல் பெட்டிகள், அட்டைப்பெட்டிகள், நெகிழிப்பொருட்கள் , மார்க்கெட் வளாகத்தில் குப்பைகள் அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. குப்பைகள் அதிகமாக குவிந்ததையடுத்து, அவற்றை அங்கேயே தீ வைத்து எரிக்க மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று ( 25.05.2023 ) மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில், காய்ந்துபோன கருவேல முள் மரங்கள் மற்றும் செடி, கொடிகளிலும் தீ பரவியது. சுமார் 15 நிமிடம் 30 அடி உயரத்துக்கு கரும் புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 939
Comments are closed, but trackbacks and pingbacks are open.