திருச்சி மாவட்டம், மணிகண்டம் வழியாக குட்கா கடத்தி வரப்படுவதாக திருச்சி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த வாகனங்கள் மற்றும் அதில் வந்த 3 பேரை பிடித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(24), நல்லுசாமி(49), புதுக்கோட்டையை சேர்ந்த போஸாங்கு(28) என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். அவர்கள் கடத்திவரப்பட்ட 14 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் சரக்கு வாகனம், கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.