2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளார். நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல் அமைச்சராக ஜோசப் விஜய், முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக, விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு
வழங்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசால், முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Z+ பாதுகாப்பு என்பது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகும். இது பெரும்பாலும் முதலமைச்சர்கள், உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படுவது ஆகும். இதில், NSG-ன் உயரடுக்கு கமாண்டோக்கள் மற்றும் மாநில காவல்துறையினர் இடம்பெற்று இருப்பர். உதாரணமாக, குறிப்பிட்ட மாநிலத் தலைமைகளுக்காக 36 கமாண்டோக்கள், 2 காவல் கண்காணிப்பாளர்கள் (SP), 2 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் (ASP) மற்றும் 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP) பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24×7 பாதுகாப்பும் இதில் அடங்கும்.

Comments are closed.