Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம்: முதல்வர் விஜய் உட்பட எம்எல்ஏக்கள் பதவியேற்பு…!

17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று (மே 11) தொடங்கியது. இதில், தற்​காலிக சபாநாயகர் கருப்பையா முன்​னிலை​யில் த.வெ.க., திமுக, அதிமுக, பா.ம.க., தேமுதிக உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். முதல்வர் விஜய் இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு சட்​டப்​பேரவை​யின் முதல் கூட்​டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இதையடுத்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என அடுத்தடுத்து 233 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்