திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்-3 மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நாளை (13.09.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் மத்திய சிறைச்சாலை, சுந்தரராஜபுரம், ஜே.கே.நகர், செம்பட்டு, இபி காலனி, காஜாமலை, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், வி.என். நகர், தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், அரியமங்கலம், மலையப்பநகர், ரயில்நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி,
மேலகல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மைவீதி, பொன்னேரிபுரம், அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், எல் ஐ சி காலனி, கே.சாத்தனூர், சத்தியவாணிநகர், கே.கே.நகர், அம்மா மண்டபம், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்கோவில் பகுதி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், ரெயின்போ நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 14.09.2024 ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. 15-ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.