Rock Fort Times
Online News

காக்கிச் சட்டையிலும் ஈரம் உண்டு: மூளை சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய காவலர்…!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பழனிசாமியின் மகன் கிஷோர்(11). 6-ஆம் வகுப்பு படித்த கிஷோருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக எல்லா வகையிலும் மருத்துவம் பார்த்தும் சிறுவன் மூளைச் சாவு அடைந்தார். இதனைக் கண்டு பதறித் துடித்த பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு மகன் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் அவனது உடல் உறுப்புகள் மூலம்
பிறராவது உயிர் வாழட்டும் என முடிவு செய்து மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். அதன்படி, சிறுவனின் உடலில் உள்ள முக்கிய பாகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அந்த உடல் உறுப்புகள்
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அந்த உடல் உறுப்புகள் பிறருக்கு பொருத்தப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்