Rock Fort Times
Online News

வலுக்கிறது கோஷ்டி பூசல்: சட்டமன்றத்திற்கு இரு குழுக்களாக வந்த அதிமுக எம்எல்ஏக்கள்….!

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் நேற்று(மே 10) முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவை கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலாவதாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். இந்நிலையில் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரிவினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய முதல் சட்டப்பேரவை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். 13-ந் தேதிக்குள், அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அப்போது ஒரு தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்