Rock Fort Times
Online News

திருச்சி, ஏ.பி.டி மாருதி ஷோரூமில் புதிய மாடல் ஸ்விப்ட் கார் அறிமுகம் – திருச்சி மாநகராட்சி துணை மேயர் முதல் விற்பனையை துவங்கிவைத்தார்!

மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் கார், இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, திருச்சியில் இதற்கான அறிமுகவிழா மாம்பழச்சாலையில் உள்ள ஏ.பி.டி மாருதி ஷோரூமில் நடைபெற்றது.இதில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, இந்திரா காந்தி கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கே.சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு புதிய ஸ்விப்ட் மாடல் காரை அறிமுகம் செய்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். புதிய மாடல் கார் குறித்து ஏ.பி.டி மாருதி ஷோரூம் பொது மேலாளர் விஜய் ஆனந்த் மற்றும் மேனேஜர் நடராஜ் ஆகியோர் கூறும்போது.,  பெட்ரோல் இன்ஜினுடன் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த காரில் உள்ளன. குறிப்பாக டிசைனை பொருத்தவரை, 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்பர்கள், எல்இடி டி.ஆர்.எல்- கள், எல்இடி புரொஜெக்டர், ஹெட் லேம்ப்கள், கிளாஸ் பிளாக், எல்இடி ஃபாக் லைட், 15 இன்ச் டைமண்ட் கட் வீல், புதிய எல்.இ.டி லைட்டுகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் போன் மிரரிங், சுசுகி கனெக்ட், ரியர் ஏசி, 6 ஏர் பேக்ஸ், இ.எஸ்.பி ப்ரேக் அசிஸ்ட், 3 பாயிண்ட் சீட் பெல்ட்,ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளும் உள்ளன. 2024 ஷிப்ட் மாடலில் முற்றிலும் புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட இசட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 80 ஹெச்.பி பவர், 112 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் LXi, VXi, VXi(O), ZXi, மற்றும் ZXi+ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது என்றனர். 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்