திருச்சி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தில், இளைஞரணி இணை அமைப்பாளராக செயலாற்றி வருபவர் பி. அருண் குமார். திருச்சி கிழக்குத்தொகுதி த.வெ.க தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அன்பாகவும், இயல்பாகவும் பழகக்கூடிய குணம் மிகுந்தவர். இவரது தந்தையான ஆர்.பாலகிருஷ்ணன் பிள்ளை, உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் – 30) காலமானார். இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், நண்பர்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை ( 31.10.2026 ) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திருச்சி, சங்கிலியாண்டபுரம், காந்தி தெருவிலுள்ள இவரது இல்லத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.