ரேஷன் கடைகளில் ரூ.200-க்கு 10 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு… * துறையூரில் துணை சபாநாயகர் மு.ரவிசங்கர் தொடங்கி வைத்தார்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ரூ.200 க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் இன்று(30-10-2026) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர் அதேபோல திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் மு.ரவிசங்கர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்புகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.