போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்: அரசு பணி நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு உயர்வு… * முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர்
சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (அக். 30) வெளியிட்ட செய்திக் குறிப்பில், போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பைத் தற்போது உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பு உயர்வானது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கெனவே உள்ள வயதுச் சலுகைகளுடன் கூடுதலாக அமையும்.
யாருக்கு எவ்வளவு வயது வரம்பு?
குரூப் 1 தேர்வு,
பொதுப் பிரிவினர்: 32-லிருந்து 37 வயது இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: 37-லிருந்து 42 வயது
மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு): 42-லிருந்து 47 வயது மாற்றுத்திறனாளிகள் (இடஒதுக்கீட்டுப் பிரிவு): 47-லிருந்து 52 வயது
குரூப் 2 மற்றும் 2A தேர்வு,
பொதுப் பிரிவினர்: 30-லிருந்து 35 வயது
இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: உச்ச வயது வரம்பில்லை மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு): 40-லிருந்து 45 வயது மாற்றுத்திறனாளிகள் (இடஒதுக்கீட்டுப் பிரிவு): உச்ச வயது வரம்பில்லை.
குரூப் 4 தேர்வு,
பொதுப் பிரிவினர்: 30-லிருந்து 35 வயது உயர்கல்வித் தகுதி இல்லாத இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: 32-லிருந்து 37 வயது உயர்கல்வித் தகுதி இல்லாத SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள்: 35-லிருந்து 40 வயது மாற்றுத்திறனாளிகள் (பொதுப் பிரிவு): 40-லிருந்து 45 வயது உயர்கல்வித் தகுதி இல்லாத மாற்றுத்திறனாளிகள் (இடஒதுக்கீட்டுப் பிரிவு): 42-லிருந்து 47 வயது உயர்கல்வித் தகுதி இல்லாத மாற்றுத்திறனாளிகள் (SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகள்): 45-லிருந்து 50 வயது
உயர்கல்வித் தகுதி உள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவினர்: உச்ச வயது வரம்பில்லை.
எப்போது அமல்?
இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (அக். 30) முதல் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். தமிழக அரசின் இந்த உத்தரவால், வயது வரம்பு முடிவடையும் நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

Comments are closed.