Rock Fort Times
Online News

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வாலிபர் கொலை: தப்பி ஓடியவர்களை பிடிக்க முயற்சிக்காத 2 போலீசார் “சஸ்பெண்ட்”…!

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கேபிள் சேகர். இவர் பன்றி வளர்ப்பு தொழில் மட்டுமின்றி பைனான்ஸ், கேபிள் உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்தார்.  இவரது மனைவி கயல்விழி. இவரும் அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தவர். தொழில் போட்டி காரணமாக கேபிள் சேகர், அவரது அண்ணன் பெரியசாமி மகன்களால் ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட நிலையில், கேபிள் சேகரின் மகன் முத்துகுமார் சமீபத்தில் அரியமங்கலம்
எஸ்.ஐ.டி.  கடைவீதியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக பெரியசாமி மகன் லோகநாதன் உட்பட 6 பேரை அரியமங்கலம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், முத்துகுமாரை வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை பிடிக்க முயற்சிக்கவில்லை எனவும், போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும் மாநகர காவல் ஆணையர் காமினிக்கு தகவல் கிடைத்தது.  இதுதொடர்பாக விசாரணை நடத்திய அவர், அன்று அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் விஜயன், முதல்நிலை காவலர் மணிகண்டன் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்