Rock Fort Times
Online News

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா? * திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பதில்!

மதுரையில் இருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் மீண்டும் வீட்டிற்கு செல்வோமா என்கிற சந்தேகம் உள்ளது. த.வெ.க ஜாக்பாட்டில் தான் ஆட்சிக்கு வந்துள்ளது. ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிலைப்பாடு குறித்து தேர்தல் அறிவித்த பின்பு முடிவெடுப்போம். ஐந்து மாத கால த.வெ.க ஆட்சிக்கு மைனஸ் பூஜ்யம் மதிப்பெண் தான் கொடுப்பேன். மீனாட்சி அம்மன் கோவிலில் நான் சாமி தரிசனம் செய்த போது மின்வெட்டு ஏற்பட்டது.
அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் ஏதோ காரணத்தை கண்டுபிடித்து கூறுகிறார். அவரை மீனாட்சி அம்மன் பார்த்துக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான் என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்