அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த தேர்தலில் அதிமுக வென்ற இடம் அம்பாசமுத்திரம் என்பதால், அங்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர் களமிறங்குவதே நியாயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.