Rock Fort Times
Online News

தீபாவளிக்கு தரமற்ற தின்பண்டங்களை விற்றால் வியாபாரிகள் மீது நடவடிக்கை… * உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் தின்பண்டங்கள் தயாரிக்க இயலாதவர்கள்
கடைகளில் விற்கப்படும் இனிப்பு, காரம் போன்ற
தின்பண்டங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதில், சிலர் இனிப்புகளில் அதிக அளவில் வண்ணங்களையும், தரமற்ற பொருட்களையும் கலப்படம் செய்வதாக கடந்த ஆண்டு அதிக அளவில் புகார்கள் சென்றன. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வணிகர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் இனிப்பு, காரம், கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பைையாளர்கள் மற்றும் தின்பண்ட சீட்டு நடத்துபவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயம். தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.  சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் நெய் விவரங்களைத் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும். கொதிநிலையில் உள்ள எண்ணெய்யுடன் புதிய எண்ணெய்யைக் கலக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருட்களின் பேக்கிங் மீது தயாரிப்பு நிறுவனம், உற்பத்தி தேதி, காலாவதி தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களின் மீது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 94440 42322 என்ற
வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக். கொள்ளப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்