Rock Fort Times
Online News

105 -வது பிறந்தநாள்: அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!

திமுக முன்னாள் அமைச்சரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பெரியார் விருது பெற்ற, மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 105 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் அமைந்துள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார் . இதில், முன்னாள் எம்.எல்.ஏ.அன்பில் பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், நீலமேகம், இ.எம்.தர்மராஜ், ராஜ்முஹம்மது, மணிவேல், ஏ. எம்.ஜி.விஜயகுமார், சிவக்குமார் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், மாவட்ட – மாநகர அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்