நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வராஜ் எம்பி உடல்நலம் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சித்தமல்லி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க போலீசாரின் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திருப்பூர் எம்பி கே. சுப்பராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, உலகநாதன், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.