திருச்சியில் உள்ள தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் இன்று(30-10-2026) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம், பொருளாளர் துரைராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் சித்ரா ஹோட்டல் பாரிவள்ளல், டோல்கேட் சுப்பிரமணி, காஜாமலை விஜய் குடமுருட்டி சேகர், தொமுச அமைப்பாளர் குணசேகர், கண்ணன், மோகன்தாஸ்,
கமல் முஸ்தபா, இளங்கோ, சிவக்குமார், டி.ஆர்.பாலசுப்ரமணியம், கிராப்பட்டி செல்வம், துர்கா தேவி, தர்மு சேகர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, கலைச்செல்வி, மண்டி சேகர், சிந்தாமணி பாலமுருகன், செந்தில் கார்த்திக், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.