Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்கத்தின் முப்பெரும் விழா

திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்கத்தின் முப்பெரும் விழா மற்றும் 59வது பொதுக்குழு கூட்டம், கல்வி ஊக்கத்தொகை மற்றும் ஆண்டு விழா திருச்சி, இபி ரோடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயுடு மகாஜன சங்கத்தின் தலைவர் விஜயகுமார் நாயுடு தலைமை உரையாற்றினார். இணைச் செயலாளர் வேணுகோபால் நாயுடு வரவேற்றார், செயலாளர் கோவிந்தராஜுலு நாயுடு

2022 – 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். வரவு,செலவு கணக்குகளை பொருளாளர் பிரபுராம் நாயுடு சமர்ப்பித்தார். பின்னர் சிறப்பு அழைப்பாளர் கண்ணன் அழகிரிசாமி உணவு ஊட்டச்சத்து குறித்து சிறப்புரையாற்றினார். 2022 – 2023 கல்வியாண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் கலியபெருமாள் நாயுடு நன்றி கூறினார் . மேலும் இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி நாயுடு, குணசேகரன் நாயுடு, ராஜேந்திரகுமார் நாயுடு, துணைச் செயலாளர்கள் சம்பத்குமார், ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி முத்துசாமி, கல்யாண் குமார், லட்சுமிராஜ், பாஸ்கரன், முத்துகிருஷ்ணன்,கோகுல்தாஸ், மனோகர், செல்வராஜ் பால்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன். மதனகோபால், சம்பத்குமார், ஆனந்தன், தண்டாயுதபாணி ,பிரசன்னா, புருஷோத்தமன், சந்திரசேகர், இளைஞரணி நிர்வாகிகள் ராஜசேகரன், புருஷோத்தமன், சரவணன், மகளிர் அணி நிர்வாகிகள் வஜ்ரமணி, தனலட்சுமி மற்றும் கீதா ஜெயக்குமார், உள்ளிட்ட நாயுடு மகாஜன சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்