Rock Fort Times
Online News

திருச்சி அருகே கார்கள் மோதல் – அந்தரத்தில் தொங்கிய கார்…. குழந்தை உள்பட 9 பேர் காயம்

திருச்சி பொன்மலை அடைக்கல அன்னை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர் பாபு(வயது 33). இவர் பெங்களூரில் இருந்து திருச்சிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இந்த காரில் இந்துமதி (29) சுகுணா (50), ஒரு வயது குழந்தை மகிஷா உள்ளிட்டோர் இருந்தனர். அதேபோல, நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா அரியூர் மேல கவுண்டம்பட்டி புதுரைச் சேர்ந்த அருண்குமார் (32) மற்றும் 7 வயதான வைணஷ்வி , 8 வயதான திவ்யஸ்ரீ, சரண்யா ( 52), விசாஸ்ரீ (7) உள்ளிட்ட 5 பேர், திருச்சியில் இருந்து மோகனூர் நோக்கி பயணம் செய்தனர். திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் சிலையாத்தி பகுதியில் இரு கார்களும் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த ஒரு வயது குழந்தை உள்பட 9 பேர் காயமடைந்தனர். மோதிய வேகத்தில் ஒரு கார் சாலை ஓரம் உள்ள தடுப்பு கம்பியில் ஏறி அந்தரத்தில் தொங்கியது. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்