Rock Fort Times
Online News

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு; திருச்சி குருகுல நிர்வாகி கைது…!

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீராமகிருஷ்ண குடில் உள்ளது. இங்கு ஆதரவற்ற சிறுவர்- சிறுமிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் 250 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்குள்ள சில மாணவர்களுக்கு, மடத்தை நிர்வகிக்கும் 4 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட கலெக்டரிடம் 3 மாணவர்கள் புகார் அளித்தனர். கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ்  உத்தரவின்பேரில், இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி நித்யா ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து குடிலின் நிர்வாகிகளான தனசேகர், பார்த்திபன், பாதுகாவலர்கள் சிவகிரி, ஜேசுராஜ் ஆகிய 4 பேரை கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் குருகுலத்தை நிர்வகித்து வந்த 9 நிர்வாகிகளில் தலைமை நிர்வாகியான கருப்பையாவையும் ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்