திருச்சி ராம்ஜிநகர் மாரியம்மன் கோவில் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னமேல்ரேனி தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக மில் காலனி பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது 36),ஜானகிராமன் (46)ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,250கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று திருச்சி கேகே நகர் ஐயப்பன் நகர் பகுதியில் கஞ்சா விற்ற உமேஷ் ( 29), காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில் கஞ்சா விற்ற மதன்குமார் (19), தில்லைநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தென்னூர் வாட்டர் டேங்க் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த தென்னூரை சேர்ந்த கார்த்திகேயன் ( 27)ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments are closed.