திருச்சி பொன்னகர் பகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் – மேற்குத் தொகுதி பொறுப்பாளர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்பு…!
திருச்சி மேற்கு தொகுதி, பொன்னகர் பகுதிக்குட்பட்ட 53, 54, 55, 56 ஆகிய 4 வார்டுகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி நடந்த இந்த கூட்டத்துக்கு பொன்னகர் பகுதி திமுக செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மேற்கு தொகுதி பொறுப்பாளர் பழஞ்சூர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போது செயல்படாத, வருகை தராத பிஎல்ஏ-2 மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களை மாற்றி புதியவர்களை நியமிப்பது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கை எட்டும் வகையில் பணியாற்றுவது, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னகர் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெறச்செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் முத்து செல்வம், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, பகுதி நிர்வாகிகள் பவுன்ராஜ், மோகன், போஸ், சர்ச்சில், முரளி ,சதீஷ், திருப்பதி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, அந்தோணிசாமி, வட்டச் செயலாளர்கள் கவுன்சிலர் ராமதாஸ், பாலு, மூவேந்திரன், தனசேகர் மற்றும் கவுன்சிலர் புஷ்பராஜ், வட்டச் செயலாளர் பி.ஆர்.பாலசுப்பிரமணியன், தொமுச குணசேகரன், பந்தல் ராமு உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
Comments are closed.