ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் ஊரக்குடியை சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 30). இவர் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் செயல்படும் உணவகத்தில் சப்ளையராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 20 நாட்களாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை விரதத்தை நிறைவு செய்த வடிவேல் முருகன், கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர்,
மதுபோதையில் கொள்ளிடம் ஆற்றில் குளித்து விட்டு அவ்வழியாக நடந்து சென்ற சுமார் 40 வயதுடைய பெண்ணை வழிமறித்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சலிடவே வடிவேல் முருகன், அங்கு கிடந்த கட்டையை எடுத்து வந்து அந்த பெண்ணின் பின்னந் தலையில் ஓங்கி அடித்தார்.
அடிபட்ட பெண் மயங்கி கீழே விழவே வடிவேல் முருகன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. பின்னர் அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த வடிவேல் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ,கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.