Rock Fort Times
Online News

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ்: வருகிற திங்கள் முதல் மீண்டும் குறைதீர் முகாம்கள்- திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்…!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததால் வருகிற திங்கட்கிழமை முதல் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர் முகாம்கள் நடைபெறும் என்று
மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் இக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகளும் வாபஸ் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை (ஜூன் 10) தொடங்கி ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறும். இந்த குறைதீர்க்கும் நாள் முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் "திக்... திக்... நிமிடங்கள்” - பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

1 of 874

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்