Rock Fort Times
Online News

ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் விவகாரம்: திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல்…!

திருச்சி மாவட்டம் பனையகுறிச்சியை சேர்ந்தவர் கொம்பன் என்கிற ஜெகன். பிரபல ரவுடியான  இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.  இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தவறாக வழி நடத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் அவர் மீது புகார் இருந்தது. இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் “கொம்பன் ஜெகன் டீம்”என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கொம்பன் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.  அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட சில வீடியோக்களில் போலீசாரை மிரட்டும் விதமாக உள்ளது. குறிப்பாக ரெட் அலர்ட் என்றும், சம்பவங்கள் தொடரும் எனவும் ஒரு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு வீடியோவில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை வைத்து தலைகள் சிதறும் என எழுதி மிரட்டல் விடுக்கும் வகையில் பாடல்களையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த போலீசார் அதனை பதிவேற்றம் செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  போலீசார் விசாரணையை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் குரூப்பில் உள்ள சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்