Rock Fort Times
Online News

திருச்சி வியாபாரியிடம் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிய 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு…!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காமராஜபுரம் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னர் (வயது 31). இவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர், சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணியளவில் நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோகனூர் அடுத்த அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே வந்தபோது, சாலையில் மர்ம நபர் ஒருவர் வலிப்பு வந்ததுபோல துடித்துள்ளார். அவரின் அருகே மற்றொருவர் நின்றுக்கொண்டு பிறரின் உதவி கேட்டு கூச்சலிட்டார். இதனை பார்த்ததும் பொன்னர், பைக்கை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்றார். அப்போது திடீரென இருவரும் சேர்ந்து பொன்னரை கடுமையாக தாக்கியதோடு, அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம், செல்போன் மற்றும் பைக் சாவியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் பொன்னரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனிடையே பொன்னரிடம் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிய இருவரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவருக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து நாமக்கல் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பலியானவர்கள் நாமக்கல் கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த லாரி பட்டறை கூலித்தொழிலாளி நவீன் (25), சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த மாரி (25) என்பதும், அவர்கள் பொன்னரிடம் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் "திக்... திக்... நிமிடங்கள்” - பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

1 of 874

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்