சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் விருதாச்சலம் அருகே நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரயில் வேகமாக வருவதை கண்டதும் சைக்கிளை தண்டவாளத்திலேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். அந்த சைக்கிள் மீது ரயில் மோதியதில் சின்னா பின்னமாக சிதறியது. உடனடியாக ரயிலை நிறுத்திய டிரைவர் இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், ஆர்.பி. எப்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதமடைந்த சைக்கிளை அகற்றினர். இந்த சம்பவத்தால் சுமார் 21 நிமிடங்கள் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இது சதிச்செயலா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில், அதே ரயில் லால்குடி ஸ்டேஷன் அருகே வந்தபோது 10 மற்றும் 12-வது பெட்டியில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் ஸ்ரீரங்கத்தில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கப்பட்டது. பின்னர் சுமார் 41 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு, அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது. அதனைத் தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சைக்கிள் மோதிய இரண்டாவது பெட்டி நீக்கப்பட்டு மீண்டும் 70 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.