சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பபுரம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இவரது மனைவி தேவசேனா (வயது 52) இவரை திருச்சி தில்லைநகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி ( வயது 42 ), அவரது மனைவி சுகுணா மற்றும் சதீஷ்குமார் ,ரெஜினா பேகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் 3 மாதத்தில் உங்கள் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பு செய்து தருகிறோம் என ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய தேவசேனா ரூ.41 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதன்பின்னர் முதலீட்டுத் தொகையான ஒரு ரசீதை கிருஷ்ணமூர்த்தி வழங்கியுள்ளார். அதில் ஒரு வீட்டு மனைக்கு அவர் முன்பணம் கொடுத்தது போன்று ரசீது இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் தேவசேனா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார். அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.