என்னமா யோசிக்கிறாங்க… திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம்…! (வீடியோ இணைப்பு)
இந்திய மக்களிடையே நிலவும் தங்கத்தின் மீதான மோகத்தால் சிலர் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வருகின்றனர். அவ்வாறு கடத்தி வரும்போது விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் இன்றும்(29-05-2024) அரங்கேறியது. சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தீவிரமாக சோதனை செய்தபோது, அவர் முழங்காலுக்கு அணியக்கூடிய பேடில், 1317 கிராம் எடை கொண்ட தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதேபோல, 106 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலியையும் மறைத்து வைத்திருந்தார், அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய அளவில் 1 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
Comments are closed.