Rock Fort Times
Online News

திருச்சி உட்பட 8 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழகத்தில்  8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் துவங்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 1 மற்றும் 2 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது  . என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்