வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் வாக்காளர்கள்: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.23) நடக்கிறது. தங்களது அபிமான கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதற்காக வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு
படையெடுத்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அந்த பேருந்துகளில் சிலர் வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். அப்போது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு (21.04.2026 முதல் 26.04.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்துள்ளன. அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால் அனுமதி ரத்து போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கீழ்காணும் அலைப்பேசி எண்கள் மூலம், வாட்ஸ் ஆப் / குறுஞ்செய்தி / குரல் பதிவு மூலமாக புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை
1800 425 6151
இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 99442 53404
இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 97905 50052
இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394
இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர்
91235 93971
துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம்
96773 98825
துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011
துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423
துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 80569 40040
துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343
துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர்
90257 23800
துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி
96981 18011
துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865

Comments are closed.