Rock Fort Times
Online News

இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.23) அன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை முடித்துவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க இன்னும் ஒரு சில மணித்துளிகளே மீதம் இருப்பதால், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிரடி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, எந்தவொரு செய்தி நிறுவனங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ இன்று மாலை 6 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியாது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்