Rock Fort Times
Online News

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கச் சங்கிலிகள் பறிமுதல்…!

கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பயணிகளின் உடைமையில் ஏராளமான தங்க சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
அதன்பிறகு அந்த தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை எடை போட்டு பார்த்த போது மொத்தம் 648 கிராம் இருந்தது. இந்த தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.1.01 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்க சங்கிலி களை கடத்தி வந்த 3 பயணிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்