தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு உறுப்பினர்களாக திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்ட 10 பேர் நியமனம்…!
தமிழக சட்டப்பேரவை நூலகக் குழு என்பது சட்டமன்றத்தின் மிக முக்கியக் குழுக்களில் ஒன்றாகும். இக்குழுவின் முதன்மைப் பொறுப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் அறிவுத் தேடலையும், சட்டமியற்றும் பணிகளுக்குத் தேவையான வரலாற்று மற்றும் தற்போதைய தரவுகளையும் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதாகும். அதிகபட்சம் பத்து உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் இந்தச் சட்டமன்றக் குழு, சட்டமன்ற நூலகத்தின் செயல்பாடுகள், நூலக உறுப்பினர்களுக்கான சேவைகள், மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் விரிவாக்க ஆலோசனைகள் குறித்து ஆராய்ந்து கொள்கை முடிவுகளை எடுக்கிறது. உறுப்பினர்கள் மட்டுமின்றி, பல்வேறு கிளை மற்றும் மாவட்ட நூலகங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து அவற்றை நிறைவேற்றத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கிறது. இப்படி பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவை நூலக குழுத்தலைவராக காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ ஜோதிமணியையும், உறுப்பினர்களாக எம்.எல்.ஏக்கள் நவல்பட்டு எஸ்.விஜி, திருநெல்வேலி ஆர்.எஸ் முருகன், சோளிங்கர் டாக்டர் கபில், சோழவந்தான் கருப்பையா, கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ், சாத்தூர் கடற்கரை ராஜ், மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் ,பண்ருட்டி மோகன், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.