Rock Fort Times
Online News

திருச்சியில் பத்தாயிரம் சதுரடியில் டைல்ஸ் & சானிட்டரிவேர்ஸ்க்கான பிரிமியம் ஷோரூம் விசாலா ஏஜென்சீஸ் அசத்தல் !

திருச்சியில் இயங்கி வரும் முன்னணி டைல்ஸ் அண்ட் சானிட்டரிவேர்ஸ் நிறுவனமான விசாலா ஏஜென்சிஸ், தனது புதிய விரிவுபடுத்தப்பட்ட பிரமாண்டமான பிரீமியம் ஷோரூமை திருச்சி -சென்னை பைபாஸ், திருவானைக்கோவில் கொண்டையம் பேட்டையில் துவங்கியுள்ளது. இன்று (07-07-2024) நடைபெற்ற விழாவில் பிரபல ஆர்க்கிடெக்ட் பி.ஜி.சிவக்குமார் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். ஹலோ எஃப்.எம் சஹா, கிரடாய் அமைப்பின் திருச்சி தலைவர் ஆர்.மனோகரன், ஜமால் முகமது கல்லூரியின் செயலாளர் காஜா நஜீமுதின், திருச்சி மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் இன்ஜினியர் ஏ.சதீஸ்வரன், சாமி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் எம் இளமுருகன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். புதிய ஒருங்கிணைந்த பிரீமியம் ஷோரூமில் டைல்ஸ் அண்ட் சானிட்டரி வேர்சின் முன்னணி பிராண்டுகளான கோலர், விட்ரா, நெக்ஸியான் உள்ளிட்ட பிரத்தியேக பிரிவுக்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.
இந்திய கட்டிடக் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆர்கிடெக்சர் பி.சந்திரநேசன், சௌடாம்பிகா குழுமத் தலைவர் எஸ். ராமமூர்த்தி, நெக்ஸியான் துணைத்தலைவர் கௌரவ் கந்தர்வால், நெக்ஸியான் குழுமத்தின் வியாபாரப்பிரிவு துணைப்பொது மேலாளர் பி.ரவிக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பாரத் பிரமோட்டர்ஸ் நூர்முகமது, எம்.கே.பி புரமோட்டர்ஸ் எஸ்.சையத் இம்ரான், கிரடாய் அமைப்பின் சேர்மன் ரவி, ஜெயம் பில்டர்ஸ் ஆனந்த், குமார் பில்டர்ஸ் நிறுவனரும், பிரபல வாஸ்து நிபுணருமான எஸ்.குமார், ஜே.ஜே. பில்டர்ஸ் ஜஸ்டின் ஜோசப், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு, திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் பி.ஸ்ரீதர், திருச்சி மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.
கண்ணன், இன்ஜினியர் டி. பூபதி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் திருச்சி தலைவர் கே.பழனிக்குமார், திருச்சி சிவில் இன்ஜினியர் அசோசியேஷனின் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், சிக்னேச்சர் டிசைன்ஸின் நிறுவனர் ஆர்க்கிடெக்ட் ஜி.ராஜா, எஸ்.எஸ்.அசோசியேட்ஸ் நிறுவனர் எஸ்.சுப்பிரமணியன்,ஆர்க்கிடெக்ட்கள் ஜனார்த்தனன் வெள்ளைசாமி, டி.அண்ணாமலை, ஏ.அபூபக்கர் சித்திக் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை விசாலா ஏஜென்சிஸின் உரிமையாளர் பிஎல் ஆனந்த் வரவேற்றார்.

 

இவ்விழாவில் விக்னேஷ் குழுமங்களின் தலைவர் கோபிநாத், நவீன் ஏஜென்சீஸ் ஜோசப் ஜெரால்ட், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகள் கே.எம்.எஸ்.ஹக்கீம், பாலகிருஷ்ணன், கே.எம்.எஸ் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விசாலா ஏஜென்சிஸின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்