கரூரில், ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் தன்னைக் கைது செய்யாமலிருக்க முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில், இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீஸார் ஏற்கனவே சோதனை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர். விஜய பாஸ்கரின் வீட்டிலும் சிபிசிஐடி சோதனை நடைப்பெற்று வருகிறது. மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படை அமைத்து பிடிக்கவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1
of 841
Comments are closed.