Rock Fort Times
Online News

ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக்கோரி திருச்சியில் வாகன நலச் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டம்…!

ஆன்லைன் அபராத முறையினை ரத்து செய்து பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஹெல்மெட் அபராதம் ஆயிரமாக உயர்த்தியதை மாற்றி அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திணிக்க கூடாது. ஆர்டிஓ அலுவலகங்களில் உள்ள நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம் விதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.
அஞ்சல்மூலம் ஆர்சி புக் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கம் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று(30-01-2025) உரிமை கேட்பு போராட்டம் நடைபெற்றது. இதில், மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன், மாநில செயலாளர் ஜமால் முகமது, மாநில பொருளாளர் சேகர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, மாநில துணைத்தலைவர் ராஜா, திருச்சி மாவட்ட தலைவர் சுகந்தி ராஜா, மாவட்ட செயலாளர் அர்ஜுனன், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், பஜார் மைதீன் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக அவர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்