திருச்சி உறையூர் கோணக்கரை பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. இங்குள்ள பாரை தில்லை நகர் ரகுமானியபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 23 )என்பவர் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நான்கு வாலிபர்கள் அங்கு மது அருந்த வந்தனர். பின்னர் மது போதையில் பாரில் இருந்த நாற்காலிகளை தூக்கி போட்டு உடைத்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த குடிமகன்கள் சிதறி ஓடினர். உடனே செந்தில்குமார், கலாட்டாவில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த வாலிபர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (19 ), தட்சிணாமூர்த்தி (19) என்பதும், தப்பி ஓடியது பாட்ஷா, சுகுமார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.