Rock Fort Times
Online News

தேர்தல் அப்டேட்களை உடனுக்குடன் செயலியில் பதிவு செய்ய தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்​குப்பதிவு வருகிற 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான ஆயத்​தப் பணி​களில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு முக்​கிய மைல்​கல்​லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்​னை​யில் பயிற்சி அளிக்கப்பட்டது. இசிஐ நெட் புரோ மாட்​யூல் என்​பது தேர்​தல் பணி​யில் ஈடுபடும் தலைமை வாக்​குச்​சாவடி அலு​வலருக்​காக உரு​வாக்​கப்​பட்ட ஒரு செயலி​யாகும். வாக்​குச்​சாவடி அலுவலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி பொருட்​கள் வரு​கை, மாதிரி வாக்​குப்​ப​திவு, வாக்​குப்​ப​திவு தொடக்​கம், அந்​தந்த நேரப்​படி வாக்​குப்​ப​திவு சதவீதம் அப்​டேட், வாக்​குப்​ப​திவு நிறைவு போன்ற அப்​டேட்​களை அதி​காரி​கள் கைபேசி செயலி மூலம் நேரடி​யாக பதிவு செய்ய இந்த புரோ மாட்​யூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயிற்​சி​யில் அனைத்து தொகு​தி​களின் தேர்​தல் நடத்​தும் அலுவலர்​கள் மற்​றும் தொடர்​புடைய பிற அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் மூத்த அதி​காரி​கள், சந்​தோஷ் பதா​ரியா மற்​றும் தருண் மிஸ்ரா ஆகியோர் இந்​நிகழ்​வில் கலந்து கொண்​டனர். அவர்​களின் வழி​காட்​டு​தலின் கீழ், மூத்த அதிகாரி​கள் மற்​றும் தொழில்​நுட்​பப் பணி​யாளர்​களுக்கு புரோ மாட்​யூலை பயன்படுத்துவது எப்படி? என்று பயிற்சி அளிக்கப்பட்டது. புரோ மாட்​யூல் செயல்​பாடு​கள் குறித்த இறு​திக்​கட்​ட சோதனை, நாளை ( ஏப்.15) அனைத்து வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​களால் நடத்​தப்​படவுள்​ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்