திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்-இரட்டை இலையை மீட்டெடுத்த இபிஎஸ் க்கு நன்றி தெரிவித்து தீர்மானம்…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவையும், இரட்டை இலையையும், மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் சட்டப் போராட்டம் நடத்தி மீட்டெடுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது. திருச்சி நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சங்க மாநில செயலாளர் சகாப்தின், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர்.வனிதா, வி.பத்மநாதன், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொறியாளர் சி.கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கலீல் ரகுமான், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எல்.முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜெ.இப்ராம்ஷா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கட்பிரபு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் இலியாஸ், மீனவரணி மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ், கலை பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சதர், மல்லிகா செல்வராஜ், பெருமாள், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ். பூபதி என்கிற பூபேந்திரன், ஏர்போர்ட் விஜி , மலைக்கோட்டை எம்.ஏ.அன்பழகன், எல்.கே .ஆர்.ரோஜர், சுரேஷ் குப்தா, நிர்வாகிகள் அக்பர் அலி, வெல்லமண்டி கன்னியப்பன், பாலக்கரை ரவீந்திரன் வாழைக்காய் மண்டி சுரேஷ், குடமுருட்டி பிலால், கதிரவன், தில்லை விஸ்வா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.