Rock Fort Times
Online News

பெண்ணுடன் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டிய வாலிபரை கொச்சி விமான நிலையத்தில் மடக்கிய திருச்சி போலீஸார்…!

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த  23 வயது பெண், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்தபோது, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கடலூர் மாவட்டம் கோட்டுமுல்லை காந்தி தெருவைச் சேர்ந்த மு.தினேஷ் (31) என்பவருடன் பழகியுள்ளார். நாளடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் நேரில் சந்திக்க முடிவு செய்த அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19 ம் தேதி சந்தித்துள்ளனர். பின்னர் அப்பெண்ணை, தினேஷ் காரில் வேலூரில் உள்ள தனியார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதையறிந்த அப்பெண் தினேஷுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ், தன்னுடன் பேசவில்லையெனில் அவரது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார், 5 பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது தினேஷ் வெளிநாடு சென்றதால், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாரின் உத்தரவின்பேரில் தேடப்படும் குற்றவாளி (லுக் அவுட் நோட்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தினேஷ் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கிபோது குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தனிப்படையினர் அங்கு சென்று தினேஷை கைது செய்து, திருச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்